நண்பனின் திருமணம்,
முதன் முதலாய் குடித்தேன்.
குடித்த மகிழ்வில்,
நிலமொன்று வாங்கினேன்.
என்னுடைய திருமணம்
மீண்டும் குடித்தேன்
குடித்த வலிமையில்
கற்கள் சேகரித்தேன்.
குழந்தை பிறந்தது,
ஆனந்தமாய் குடித்தேன்.
குடித்த உற்சாகத்தில்,
கற்களை அடுக்கினேன்.
குவிந்தது கடன்கள்,
சோகத்திலும் குடித்தேன்
குடித்த வேகத்தில்
வண்ணங்கள் பூசினேன்.
உடல் முழுக்க நோய்கள்,
வலி மறக்க குடித்தேன்
குடித்த மயக்கத்தில்,
கட்டி முடித்தேன்......
நானே என் கல்லறையை