நின் நிறம் கறுப்பென நீக்கி வைத்த குலவும்
செவ்விதழ் என புகழ்ந்து வந்த காவியவும்
கண் இமையும் கார் கூந்தலும் கறுப்பென விளங்கியதோ
கருப்பானாலும் கலையாக இருக்கிறாள் என மொழிந்தார்
குறை ஒன்று அவள் நிறம் என்று குவிந்தார்
கொஞ்சும் குழந்தையிலும் இனம் பிரித்தார்,
அவர் கருப்பினை எண்ணி கவலையில் புதைந்தாற் .
மஞ்சள் அரைத்து முகத்தில் பூசி
கன்னம் சிவந்தால் ,
நீ மஞ்சத்தில் வென்றாய் என சொன்னார்.
சிவந்தது ஒன்றே சிறந்தது என சொல்லும் கூட்டமே ,
உங்கள் சிந்தனையின் கருப்பை
எத்தணை கோடி மஞ்சள் பூசி அழிப்பீரோ.