பெண்ணே!
அச்சம் தவிர்
அச்சம் தவிர்
நித்தம் நிமிர்
உச்சம் உயர்
தோல்வியிலும் துளிர்
வெற்றியில் மிளிர்
படைகள் சேர்
தடைகள் தளர்
சோம்பல் உதிர்
திறமை வளர்
உண்மை உணர்
உரிமை உயிர்
கடமை தொடர்
மடமை துயர்
கருணை கொள்
தீமை வெல்
அறிந்து கொள்
உரிமை கேள்
பொறுமை கொள்
பொறாமை கொல்
சரித்திரம் படை
தடைகள் உடை
புரட்சி செய்
புதுமை செய்
யுத்தம் செய்
வீடு ஆளு
நாடு ஆளு
விண் ஆளு
மண் ஆளு
பாட்டும் பாடு
நடனமும் ஆடு
கவி பாடு
கதை எழுது
வாகை சூடு
வானம் தொடு
தொடர்ந்து செல்
துணிந்து நில்
பறவையாய் உணர்த்திடு
சிறகின்றி பறந்திடு