எனக்கென எனக்கென பிறந்தவளே
உயிரென உயிரென வாழ்ந்தவளே
நீ அறியாமலே நான் உன்னை பார்க்கிறேன்
உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
காதல் என்னும் சொல்லில் நானும் தூங்க வில்லை
காதல் வந்த போது, நீ என் பக்கம் இல்லை,
வானவில்லை கூட இன்னும் ரசிக்கவில்லை
காத்திருந்து பார்த்தால் நீ என் வானம் ஆவாய்
ஒரு ராத்திரி உறங்காமலே உன்னை பத்தி யோசித்தேன்
என்னை நானே மறந்து, சிரித்து கொண்டிருந்தேன்
ஒரு நாளும் உனை பார்க்காமல் விடியலாக கூடாது
உனையின்றி வேறு உலகம் எனக்கு மட்டும் கிடையாது
உன் முகம் பார்த்து நான் வாழ்கிறேன்
ஒரு முத்தம் சுவைக்க நான் ஆசைப்படுகிறேன்
உன் கை பிடித்து நான் நடக்க விரும்புகிறேன்
உன் அன்பில் நான் திளைக்க நான் காத்திருக்கிறேன்