ஒரு தொழில்நுட்ப போர் அறை
வெதும்பிய இதயங்கள்
உலர்ந்த உதடுகள்
வறண்ட தொண்டை மனிதர்கள்
அணியினர் என்கிறார்கள்
என்னையும் உள்ளடக்கியது

எனக்கு முன்னால்
பாசமும் நெசமும் இல்லா கணினி
காதல் இல்லா இயந்திரம்
பார்த்து ஒருபோதும் சிரிக்காது
புரிந்து கொள்ளாத சாதனம்

கண்களை மூடி பார்க்கிறேன்
கிளையில் பறவைகள்
இரையை சுற்றிப் பார்க்கின்றன
மகிழ்ச்சியுடன், மனிதநேயத்துடன்
கணினி இல்லாமல்