சூரியனும் சுருண்டது வானமும் இருண்டது நேற்றோடு நிலவும் காற்றோடு கலைந்தது விறகுக் கட்டையாக்கபட்ட மரம் வேதனையில் துடிக்குது சக மரம் ஒண்ணு உடன்கட்டை ஏற துடிக்குது விதை போட்டு வளர்த்த மரம் விதவையானது மனித தடம் பதிய மர சுவடுகள் அழிந்தது மரம் தொலைத்த காடோ மலடாய் போனது புள்ளி மான் அடித்த புலியோ புள்ளி விவரமானது புள்ளி விவரமோ புள்ளியாய் போனது காட்டுவாசி பார்த்து ரொம்ப நாளானது நாட்டுவாசி பார்த்து காடும் பதறுது ஆதலால் செடிகளுக்கு வேர்விடு செழுமையாக வாழவிடு தப்பும் திருத்திடு வெப்பம் குறைத்திடு மரங்கள் வளர்த்திடு பூமியை குளிரவிடு நல்லதோர் பூமி நாத்திகனுக்கும் சாமி வணங்கிடு வாழ்ந்திடு பூமியை வாழவிடு