நடுநிசியிலே தொடர்ந்து செல்கிறாள் ஒருவள்
தான் தேடும் இலக்கை நோக்கி,
சிறு பள்ளத்தில் தட்டி விழுந்தாள்,
விம்மி குரல் கொடுத்தாள்,
கேட்பார் யாரும் இலர்..
ஆழியில் வீழ்வேன் என பயந்தாள்,
தன்நம்பிக்கையை விட்டு விட்டு
பிறர் கைகளை தேடினால்,
பின்னர் இலக்கை விட்டாள்..
இருள் அகன்றது ஒரு நாள்,
விழி ஒளி பெற்றது,
அரை அடிதான் இருந்தது,
அவளுக்கும் தரைக்கும்..
இதயம் வெடிக்க அழுதாள்,
நினைத்த இலக்கை அடையாமல் விட்டதற்கு,
உன்னை நம்பி நீ முன்னேறி செல் அம்மா!..
சிக்கல்களை சுக்கல்களாக்கி,
சிகரமே உன் உயரம் என முன்னேறு செல்லம்மா,
பயம் கொண்டு பின்வாங்கினாள், போம்மா போ,
வீட்டிலேயே முடங்கி இரு, அடுப்பறை பூனையாக..