தேர்தல்

posted in: Poem - Tamil | 0

போர்களில் வாளை சுழற்றி ,

உதிரம் வழிய போராடி ,

அரசின் கொடியை உயர  பறக்க செய்தவனேயும்  அரசனென்றோம்

ஆர்வம்  நிறைந்து , குழப்பத்தில் குதிர்ந்து, குறுகி குழைந்து

தன் அரசை பலி கொடுத்தவரேயும் அரசனென்றோம்.

மன்னன் வாழ்கவென்று  அன்று ஒருவன் கூவினான்

முட்டாள் கூட்டம் கூடி அதை ஒளிர்ந்தோம்

தலைவர் வாழ்க என்று இன்று ஒருவன் கூவினான் ,

கூட்டமாய் அதையும் ஒளிர்ந்தோம்

வேடிக்கை என்னவென்றால் , வாழ்வது தலைவர் மட்டும் தான் என  தெரிந்தும்

கூட்டமும்  குறையவில்லை குழப்பமும்  தீரவில்லை

அன்றைய மன்னனுக்கு கல்வி , கலை, கருத்து   என துடங்கி

இன்றது வெள்ளை  ஆடை , பெருகிய வயர் , பொய் பேச்சு என சுருங்கியது

தேர்ந்தெடுக்கப்படும் தலைவனுக்கு ,

அன்றும் இன்றும் தகுதிகள் நிச்சயிக்கப்பட்டுள்ளது

ஆனால் தேர்ந்தெடுக்கும் கூட்டத்திற்கு  தகுதியென்ன?    இன்றும் குழம்பியது .

Name : Kripa K B
Company Name : EY ,Drishya Building Kinfra

Click Here To Login | Register Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *