நீயே என்னைத் தேடி வந்தாய்,முதல் பார்வையிலே காதல் கொண்டாய்,
உன் கை பிடித்தே என்னை கூட்டிச்சென்றாய்,காத்த தூரம் கடந்து உன் வீட்டில் சென்றாய்.
உன் மாறினிலே என்னை சாய்த்துக்கொண்டாய்,உன் மடியினிலே தவழ வைத்தாய்,
உன் இடையினிலே என்னை நெளியவைத்தாய்,இறுக்கமாய் என்னை நீ உடுத்திக்கொண்டாய்.
புதிதாய் வந்த நான் உனதானேன்,உன் வியர்வையிலே உடல் சூடானேன்,
ஒன்றாய் புகைப்படம் பல எடுத்தோம்,காலங்கள் வாழ்வோம் என நாம் நினைத்தோம்.
வருடங்கள் ஓடி நான் வயதானேன்,வயோதிகனாய் இன்று நான் மாறிவிட்டேன்.
புதிதாய் யாரை நீ கண்டதாலே,தெரிந்தே என்னை நீ மறைத்துவைத்தாய்?
ஒருநாள் என்னை நீ துண்டாக்கினாய்,கைகள், கால்கள் நீ வேறாக்கினாய்,
என் ஒருபகுதி மிதியடியாக,என் மீதியோ அடுப்பங்கரை கரித்துணியாக!!!
இன்றும் உன்னை நான் காதலிக்கிறேன்,உன் கைகள் புண்ணாக விடமாட்டேன்,
உன் சேலையாய் உன்னோடு வாழ்ந்துவிட்டேன்,கரித்துணியாய் தினம் உன்னை காத்திருப்பேன்.
Participant’s full name : Siva Praboth M S
Company name : Envestnet , Technopark Campus , Kazhakuttom ,Trivandrum
You need to login in order to like this post: click here
Leave a Reply